தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் ஏற்பாட்டில் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர் தலைமையில் நகர மாணவரணி செயலாளர் விநாயகம் முருகன் வரவேற்பில் 10,000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது மக்கள் அனைவரும் பசி பட்டினி இல்லாத வாழ்வு வாழ வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் தான் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கியது மட்டுமல்லாமல் அம்மா உணவகங்கள் அமைத்து அதன் மூலம் குறைந்த விலையில் சாம்பார் சாதம் தயிர்சாதம் வழங்கி பசித்த வயிற்றுக்கு அன்னமிட்ட ஒரே தங்க தலைவி புரட்சித்தலைவி அம்மா தான்.

இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சரித்திர சகாப்தமாக வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாள் விழா தொடர்ந்து நடைபெறுவதின் தொடர்ச்சியாக இந்த கோவில்பட்டி நகரில் 10,000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.