தற்போதைய செய்திகள்

வாலிகண்டபுரத்தில் கழகம் சார்பில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேப்பந்தட்டை ஒன்றிய கழக செயலாளரும், பெரம்பலூர் நிலவள வங்கி தலைவருமான சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை ஒன்றிய பொருளாளர் சி.லோகநாதன், வேப்பந்தட்டை ஒன்றிய இணை செயலாளர் பெரியம்மாள் நீலன், ஒன்றிய துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரா.தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளருமான வரகூர் அ.அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் சந்திரகாசி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தொடர்கிறது. ஆனால் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். ஆனால் அவர் உறவினர் ஒருவரை கூட கட்சியில் கொண்டு வரவில்லை. அதே போல் அம்மா அவர்களும் தனது குடும்ப நபர்களை கட்சிக்கு கொண்டு வரவில்லை. ஸ்டாலின் எப்படியாவது கபளீகரம் செய்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவரின் முதலமைச்சர் கனவு கனவாகியே போகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் ரா.துரை, மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள், வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி கனகராஜ், துணை சேர்மன் வேலுசாமி, வெண்பாவூர் லோகநாதன், சாத்தனவாடி துரை கிருஷ்ணா, வி.களத்தூர் காவியா ரவி, மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் அஞ்சலம் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்ல கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.