தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் உண்மையான விவசாயி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உண்மையான விவசாயி என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி கழகம் சார்பில் சிந்தாதிரிபேட்டை கலவை தெருவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சேப்பாக்கம் பகுதி கழக செயலாளரும், திருவல்லிக்கேணி கூட்டுறவு கடன் சங்க தலைவருமான எம்.கே.சிவா தலைமை வகித்தார்.

தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர்.வாசன் வரவேற்றார். கழக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் குண்டு கல்யாணம், அதிரடி அரங்கநாதன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் முதலமைச்சர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. அம்மா சொன்னது போல் கழகம் 100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும், சிலர் முதலமைச்சரை பார்த்து விவசாயியா என்று கேட்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உண்மையான விவசாயி.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.