தமிழகம்

போலி பத்திரப்பதிவை தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை

போலி ஆவணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளை தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட உத்தரவு வருமாறு:-

போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக பத்திரப்பதிவுக்கு முன்னரே உட்பிரிவுகள் பரீசிலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும், இந்த நடைமுறையின் கீழ் தத்தமது நிலங்களை சொத்துக்களை விற்பனை செய்ய விரும்பும் நில உரிமையாளர்கள் வட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து தாம் விற்பனை செய்ய விரும்பும் நிலங்கள் சொத்துக்கள் குறித்த புலப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற வேண்டும்,.

அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதும்,. வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய நிலப் பரிவர்த்தனைக்காக தற்காலிக உட்பிரிவு ஆவணங்களை தயார் செய்பவர் பட்டா மாறுதல் செய்யத்தக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையவழியில் தொடர்புடைய சார்பதிவகம், மற்றும் நில உரிமையாளர் ( விண்ணப்பத்தாரர்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும், இதன் பின்னர் நில உரிமையாளர் தனது நிலப் பரிவர்த்தனையை சார்பதிவகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும், இதன்பின்னர் இணைய வழியிலான பட்டா மாறுதல் விவரங்கள் மீண்டும் புலத்தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது