திருவள்ளூர்

குடிமராமத்து திட்டத்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ பெருமிதம்

திருவள்ளூர்

குடிமராமத்து திட்டத்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சிவலிங்கபுரம் குளத்தை தூர்வாரி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணி மற்றும் மேனாம்பேடு கருக்கு பகுதியில் அமைந்துள்ள குளம், சர்வீஸ் சாலையில் உள்ள தாங்கள்குளம், டிடிபி காலனியில் உள்ள வண்ணான்குளம், காமராஜ் நகரில் உள்ள கண்ணாத்தாள் அம்மன் கோயில் குளம் ஆகியவற்றை தூர் வாரி கரைகளை அமைத்து நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காக்கள் அமைக்கும் பணியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர்வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் நிர்வாக திறமையால் கடந்த ஆண்டு ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை மிக சிறப்பாக கையாண்டு பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தார். மேலும் குடிமராமத்து பணியை மேற்கொண்டதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக அம்பத்தூர் பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நீர் நிரம்பி உள்ளது. எனவே வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சினைகளை சாதுரியமாக கையாண்டு நல்லாட்சி நடத்தி வருகின்றனர்.

ஏரி, குளங்களை தூர் வாரும்போது ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பிறகு தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் கடந்த ஆண்டு செய்து முடித்து குடிமராமத்து பணியை அண்டை மாநிலங்கள் அனைத்தும் பின்பற்றுவதுடன் தமிழக முதல்வரை வெகுவாக பாராட்டுகின்றனர். மேலும் குடிமராமத்து பனியை மேற்கொண்டதால் தமிழகம் தலை நிமிர்ந்துள்ளது.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர்கள் சுந்தரேசன் மற்றும் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், டன்லப் வேலன், எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், தீபா சீயாளம், இ.செல்வராஜ், பிரபாகரன் அரிகிருஷ்ணன், மோகன், ஒய்.ராஜா, வக்கீல் முருகேசன், எல்.என்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.