சிறப்பு செய்திகள்

கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.49.60 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்…

கோவை:-

கோயமுத்தூர் மாநகராட்சி, தெற்குமண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.90, 91 ஆகிய பகுதிகளில் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான சிறுவர் பூங்கா, எல்.இ.டி. தெருவிளக்குகள், குடிநீர் வசதி ஆகிய வளர்ச்சிப் பணிகளை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை வகித்தார்கள்.

மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அன்புஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 91-வது வார்டு ஜி.ஆர்.ஜி. கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.13.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவருடன் கூடிய சிறுவர் விளையாட்டுத் திடலையும், 90-வது வார்டு கோவைப்புதூர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.9.90 லட்சம் மதிப்பில் சி.எஸ்.அகாடமி பள்ளிசாலை தொடர்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. தெருவிளக்குகளின் செயல்பாட்டினையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர், மதுக்கரை, அண்ணாநகர் பகுதியில் இப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் செயல்படும் விதமாக பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மேலும் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.25.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 ஆழ்குழாய் கிணறுகளையும் ஆகமொத்தம் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் அவர்கள், உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், பகுதி கழக செயலாளர் வி.குலசேகரன், பகுதி கழக துணை செயலாளர் எஸ்.எம்.உசேன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட கழக செயலாளர் ஆர்.சசிக்குமார், வார்டு கழக செயலாளர்கள் எஸ்.சி.செல்வராஜ், தமிழரசி சுப்பிரமணி, சித்திரை செல்வராஜ், கே.பி.பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.