மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் முதலமைச்சருக்கு வீர வாள் பரிசு – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வெற்றியின் அடையாளமாக வீர வாளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பரிசாக வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்தார். அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு கார் மூலம் புறப்பட்டு ெசன்ற முதலமைச்சருக்கு அம்பேத்கர் சிலை அருகே மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பான வரவேற்பு அளித்தார்.

பெண்கள் பூரண கும்ப மரியாதை வைத்தும் மேளதாளங்கள் முழங்கியும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வெற்றியின் அடையாளமாக முதலமைச்சருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வீரவாளை பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மற்றும் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார் பாண்டி, பொன்னுச்சாமி, வெற்றிசெழியன், நகர செயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், பகுதி கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஜீவானந்தம், வண்டியூர் முருகன், மாவட்ட மன்ற செயலாளர் ஓம்கே சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் இரட்டை விரலை உயர்த்தி காண்பித்தபோது அங்கிருந்த பொதுமக்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர் முதலமைச்சர் அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார்.