வேலூர்

ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது – சு.ரவி எம்எல்ஏ பேச்சு

வேலூர்

கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது. அதுபோல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது
என்று வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கூறினார்.

வேலூர் கிழக்கு மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் சம்பத்துராயன் பேட்டை கிராமத்தில், ஒன்றிய கழக செயலாளர் நெமிலி ஏ.ஜி.விஜயன் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி கழக செயலாளர் கோ.டோமாஸ், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் என்.குகன் ஆகியோர் வரவேற்றனர்.

தயாளன், கணேசன், சேகர், குப்பன், பழனி, பார்த்தசாரதி, செல்வி, படவேட்டான், கனகசபை, ஸ்ரீதர், குமார், சங்கர், நீலமேகம், பிரகதீஸ்வரன், அரசு, கருணாகரன் கந்தவேல், லோகநாதன், பழனி, வடிவேல், சொக்கநாதன், விநாயகம், தேவராஜ், ஆறுமுகம், தில்லி, குமரேசன், நாகராஜ், பாலு, தங்கவேலு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். மகளிர் காவல் நிலையம், மகளிர் கமாண்டோ படை ஆகியவற்றை கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்து பெண் சிசு கொலைகளை தடுத்தார். அன்னை தெரசாவே அம்மாவின் வீட்டிற்கு நேரில் சென்று புரட்சித்தலைவி அம்மா அவர்களை பாராட்டி சென்றார். ஆளுமைமிக்க தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ,மக்களுக்கு அந்த நேரத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கு ஒரு ஆபத்து வந்தது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அனைத்து அரசியல் தலைவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை சமூக நீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினார்கள். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்கி ஆண்களுக்கு பெண்கள் சமம் என்ற உரிமையை நிலைநாட்டினார்.

அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். காவேரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை அனைத்து அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் சேலம் தலைவாசலில் ஒரு மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 100 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வரப்பட்டுள்ளது.

அம்மா ஆட்சியில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி, நெமிலி ஒன்றியம்,ஆட்டுபாக்கம் பகுதியில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, சாலைகள், மேம்பாலங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை கொண்டு வரப்பட்டது. ஆகவே இந்த கிராமத்தில் வாழும் பெரியவர்கள், தாய்மார்கள் எல்லாம் என்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு ஆதரவு தரவேண்டும்.

வருகின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நடக்க இருக்கிறது. வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை 100 சதவீதம் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக கழகத் தொண்டர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்.

கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது. ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ பேசினார்.