திருநெல்வேலி

இந்தியாவிற்கே வழிகாட்டும் சூப்பர் முதல்வர் எடப்பாடியார்- ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. பேச்சு

திருநெல்வேலி:-

இந்தியாவிற்கே வழிகாட்டும் சூப்பர் முதலமைச்சர் எடப்பாடியார் என்று கழக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை எம்.எல்.ஏ. கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி பகுதி கழகம் சார்பில் திருநெல்வேலி டவுண் லட்சுமி தியேட்டர் கலையரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் சண்முகையா, பகுதி செயலாளர் மோகன், வட்ட செயலாளர் குருசாமி, மலர்முத்து, ஏ.எஸ்.சங்கர், பாண்டியன், நெடுஞ்செழியன், நவுசாத் காந்தி, வெங்கடாச்சலம், பக்கீர் மைதீன், ஜகான், மணிமாலிகை கணேஷ், டவுண் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் கழக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் நடைபெறும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வில் மேன்மையடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வருகிறது. சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியதும் அம்மாவின் அரசுதான். ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நெல்லை மாவட்டத்தின் சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மணிமண்டபம் தந்ததும் அம்மாவின் அரசு தான்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் வழங்கியதும் அம்மாவின் அரசுதான். தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடியாரின் சீரிய முயற்சியால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக இருப்பவர் நமது சூப்பர் முதல்வர் எடப்பாடியார்.

இவ்வாறு ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் விஜிலா சத்யானந்த் எம்.பி., கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் காந்தி வெங்கடாசலம், தீப்பொறி முருகேசன், கபாலி, படப்பை சுந்தரம், பேபி சுந்தர் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.