தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர்கள் வழங்கினர்

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் வழங்கினர்.

புரட்சித்தலைவி அம்மாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சந்திரன், வக்கீல்கள் சேதுராமன், குருசாமி பிள்ளை, ஈரோடு சாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ்எஸ் ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, வெற்றி செழியன், பொன்னுச்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆ.ர் மன்ற இணை செயலாளர் மேலூர் துரைப்பாண்டி, நகர செயலாளர் பாஸ்கரன், பகுதி கழக செயலாளர்கள் ஜீவானந்தம், வண்டியூர் முருகன், பேரூர் செயலாளர் மணிகண்டன், கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.