தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் கனவு நிறைவேறி வருகிறது – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

மதுரை

புரட்சித்தலைவி அம்மாவின் கனவை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நிறைவேற்றி வருகின்றனர் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை. குடிமராமத்து திட்டப்பணி மூலம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாயில் நீர் நிரம்பி உள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதி பசுமைப் பூமியாக திகழ்கிறது.

மதுரையில் எதை ஆரம்பித்தாலும் நிச்சயம் வெற்றி பெறும். புரட்சித் தலைவரும், புரட்சி தலைவி அம்மாவும் எதை செய்தாலும் மதுரையில் தான் தொடங்குவார்கள். அதே வழியில் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவினை முதலமைச்சர் மதுரையிலிருந்து தான் தொடங்கி 32 மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்தினார்.

அம்மாவின் பிறந்தநாள் விழாவை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக கொண்டாட வேண்டும் என்ற அம்மாவும் எண்ணத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நிறைவேற்றி வருகின்றனர். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத் தந்துள்ளனர். ஆகவே வரும் காலங்களில் உங்களை ஏற்றம் பெற வைத்த எங்களுக்கு ஏற்றம் தரும் வகையில் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.