சென்னை

ஆர்.கே.நகர் பாக பொறுப்பாளர்களுடன் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனை

சென்னை

மாநகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தண்டையார்பேட்டையில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த பாக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது பாக பொறுப்பாளர்களிடம் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாக பொறுப்பாளர்கள் கழகத்தின் சார்பில் நிறுத்தப்படும் தேர்தல் முகவர்களாகவும் மற்றும் கட்சி பணிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தெருமுனை கூட்டம், அரசின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம், பகுதியில் ஏற்படும் சாக்கடை அடைப்பு, குடிநீர் தேவைகள், பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெற்று தருதல், சுகாதார சீர்கேட்டை கலைதல், உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து அப்பகுதி மக்களிடம் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் நன்மதிப்பை பெற்று கழகத்திற்கு நற்பெயரை ஈட்டுவது என அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

கூட்டத்தில் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், ஏ.கணேசன், ஏ.வினாயகமூர்த்தி, ஆர்.நித்தியானந்தம், சந்தனசிவா, ஆர்.வி.அருண்பிரசாத், இ.வேலுமேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், வேல்முருகன், மரக்கடை விஜி, டி.ஜே.சுரேஷ், எம்.ஹரிகிருஷ்ணன், எல்.எஸ்.மகேஷ்குமார், இஎம்எஸ். நிர்மல்குமார், டி.பிரபாகரன், ஒ.ஏ.ரவிராஜன், இரா.முரளிமுருகன், எஸ்.மோகன், ஜி.ஜானி, ஏ.சேகர், மகேந்திரன், யுவராஜ் உள்பட பாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்ட இறுதியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் நினைவாக பாக பொறுப்பாளர்களை ஊக்கப்படுத்தும் கையில்அவர்கள் அனைவருக்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், தையல் இயந்திரம், சைக்கிள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.