தற்போதைய செய்திகள்

கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் 1072 ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.சி.வீரமணி- ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினர்

வேலூர்

வேலூர் கிழக்கு மாவட்டம் கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் லத்தேரி பேருந்து நிலையம் அருகில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1072 ஏழை, எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினரும் கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான செஞ்சி ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பி.சுரேகா பாபு, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் எல்.எம்.பாபு ஆகியோர் வரவேற்றனர்.

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.ராமு, ஒன்றிய கழக அவைத்தலைவர் பி.தேவன், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் ரோஸ்மேரி வஜ்ஜரம், ஏ.டி.பொன்முடி, ஒன்றிய கழக பொருளாளர் டி.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.சிவா, மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எல்.பி‌.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன் ஆகியோர் ஏழை எளியவர்கள் 1072 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கூட்டத்தில் ஆவின் தலைவர் த.வேலழகன், அறங்காவலர் குழு தலைவர் கே.ஜெயபிரகாஷ் வழக்கறிஞர் எ.டில்லிபாபு, மாவட்ட கழக இணை செயலாளர் கே.எம்.கலைச்செல்வி, மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சொக்கலிங்கம் எல்.ஆர்.ராஜா, ஏசி முரளி ரங்கநாதன், மோகன், பரதராமி கோபி, சுமதி சேகர், கஜேந்திரன், பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.