திருவள்ளூர்

அம்மா ஆட்சி தான் 100 ஆண்டுகள் நீடிக்கும் – மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேச்சு

திருவள்ளூர்

தமிழகத்தில் அம்மா ஆட்சி தான் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு 1072 ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர் கோபால் நாயுடு, கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் சிவகுமார், கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் சேகர் ஆகியோர் வரவேற்றனர். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், தலைமை கழக பேச்சாளர் எம்.பி.சோலைமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். இந்த ஆட்சி இன்று கவிழும், நாளை கவிழும் என்று எதிர்க்கட்சிகள் பகல் கனவு கண்டு கொண்டிருந்தன. ஆனால் மூன்று ஆண்டுகளையும் கடந்து நான்காம் ஆண்டில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். திமுகவினர் சட்டமன்றத்தில் ஏதாவது கலாட்டா செய்து சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க நினைத்தனர். அவர்களது ஆசை நிறைவேறவில்லை. திமுக என்றாலே அராஜகம், திமுக என்றாலே ரவுடியிசம். அதன் காரணமாகத்தான் மக்கள் அண்ணா திமுகவை ஆதரித்து தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருகிறார்கள்.

அம்மா இன்று நம்மை விட்டு சென்றதற்கு காரணம் தி.மு.க.வினர் போட்ட பொய் வழக்கு தான். தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து போராட்டத்திற்கும் பின்னாலிருந்து இயக்குவது திமுகதான். அதற்கு விரைவில் மக்கள் பதிலடி தருவார்கள். இன்று நடைபெறுவது அம்மாவின் ஆட்சி. ஏழைகளின் ஆட்சி விவசாயிகள் ஆட்சி. எனவே இந்த ஆட்சி அம்மா அவர்கள் கூறியது போல் இன்னும் 100 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் அமலன் சாம்ராஜ், தலைமை கழக பேச்சாளர் சோலைமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் அபிராமி, ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தன்ராஜ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் தயாளன், ஒன்றிய கவுன்சிலர் கோபி அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கும்மிடிபூண்டி ஒன்றிய கழக செயலாளர் வீ கோபால் நாயுடு செய்திருந்தார்.