சிறப்பு செய்திகள்

நாங்குநேரி- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கழகத்தினர் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் : கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் தலைமை கழகத்தில் ரூ.25 ஆயிரம் முன்பணம் கட்டி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து  விண்ணப்பிக்கலாம் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமை கழக அறிவிப்பு வருமாறு:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக்கழகத்தில் 22.9.2019-ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ;

23.9.2019 – திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரையிலும் விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ரூபாயை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து, அப்படிவங்களை 23.9.2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தவறாமல் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.