தற்போதைய செய்திகள்

மக்களை பிரிக்க நினைக்கும் தி.மு.க.வின் கனவு பலிக்காது – வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா பேச்சு

சென்னை

மத ரீதியில் மக்களை பிரித்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற தி.மு.க.வின் கனவு பலிக்காது என்று திரு.வி.க நகர் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலகங்கா பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் பகுதி கழகம் 76-வது வட்ட கழக துணை செயலாளர் எஸ்.மூர்த்தி, தலைமையிலும், பகுதி கழக செயலாளர் இரா.வீரமணி முன்னிலையிலும், குயப்பேட்டையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, தலைமை கழக பேச்சாளர்கள் எம்.சத்யம், செங்கை கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா பேசுகையில், முதல்வரும், துணை முதல்வரும் இரு கண்களாக இருந்து கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இந்த ஆட்சியையும், கழகத்தையும் எந்த கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. தமிழகத்தில் 7 முறை ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க தான். தமிழகத்தில் முதல்வராக எம்.ஜி.ஆர் 3 முறை ஆட்சி செய்தார்.

அம்மா 4 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். இதுவே சாதனை தான். அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருப்பதே பெருமை தான். பதவி வரும், போகும். ஆனால் வடநாட்டில் இருந்து வந்த ஒருவரை நம்பி திமுக செயல்படுவதை கண்டு அக்கட்சியினரே வெட்கப்படுகிறார்கள். மத ரீதியில் மக்களை பிரித்து அவர்களின் ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற தி.மு.க.வின் கனவு பலிக்காது என்றார்.

இப்பொதுக்கூட்டத்தில் ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயின், குமாரிநாராயணன், ஆர்.மகேஷ், முகமது இம்தியாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கே.ராஜ்முகமது, எ.இளையகிருஷ்ணன், ஆர்.ராகேஷ்ராஜா, ஜி.என்.கமலநாபன், ராமஞ்சேரி நடராஜன் பி.கேஜெயக்குமார், ஜி.மைதிலி, வி.குணாளன், ஜி.புண்ணியக்கோட்டி, தேவி, வி.எம்.ஜி.முகுந்தன், புரசை டி.சீனிவாசன், எம்.சரோஜா, டி.வசந்திதாசன், ஆசைமணி பாஸ்கர், வட்ட செயலாளர்கள் சு.அறிவழகன், பெ.சு.நவமணியன், கே. சிவகுமார், சுப்புரு, பி.ஜீவா, எ.அப்துல்வகாப், எம்.பி.பரமகுரு, பி.எம்.ரமேஷ்குமார், ஜி.கே.கோபிநாத், முன்னாள் பகுதி கழக செயலாளர் வி.சுகுமார், எம்.ஜி. செல்வகுமார், ஆர்.பி.புண்ணியகோட்டி, கார்மன் ஸ்ரீரீதர், நாம்மாள்வார்பேட்டை கண்ணன், மஞ்சுளா, மூர்த்தி, சரளா, திரு.வி.க தெரு தசரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 76-வது வட்ட கழக செயலாளர் வி.சி.ஜெகன், வட்ட கழக மேலமைப்பு பிரிதிநிதி பட்டாளம் இ.தயாளன் ஆகியோர் நன்றி கூறினர்.