தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகர் மீன்பிடி துறைமுகத்திற்கு அம்மா பெயர் சூட்ட வேண்டும் – வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மீனவரணி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை

ஆர்.கே.நகர் மீன்பிடி துறைமுகத்திற்கு புரட்சித்தலைவி அம்மாவின் பெயர் சூட்ட வேண்டும் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மீனவரணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக மீனவரணி சார்பில் மீனவர் பிரச்சனை மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரச்சனை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட மீனவரணி செயலாளர் பி.ஜெகன் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் நடைபெற்ற மீனவரணி ஆலோசனை கூட்டத்தில் சிறப்பாக நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் போது ஆர்.கே.நகர் மீன்படி துறைமுகத்திற்கு மறைந்த முதல்வர் அம்மாவின் பெயரை சூட்ட வேண்டும். 18-மீனவ கிராமங்களை உள்ளடக்கி ஆர்.கே.நகர் தொகுதி மீனவ கிராமங்கள் நலசபை தொடங்க வேண்டும். மீன்பிடி துறைமுகத்தில் மீனவ நல சபைக்கு புதிய சங்க அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும். ஏழை மீனவ மக்கள் குழந்தைகளுக்கு தரமான பள்ளி கட்டடம் கட்ட வேண்டும். விளையாட்டு பூங்கா, மைதானம் அமைக்க வேண்டும். ஆர்.கே.நகரில் விடுபட்ட கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வது,

சுனாமியால் உயிர் நீத்த சொந்தங்களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு மீன்பிடி விற்பனை சந்தையில் மேற்கூரை, மற்றும் நீர் தொட்டி, கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். மீனவ கிராமங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்துவது, வரும் பிப்ரவரி 24-ந்தேதி மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்றும், மாநகராட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றி கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது என்றும், காசிமேடு மீனவ மக்களுக்கு உறுதுணையாக நின்று கழக பணியாற்றும் கழகத்தின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் மற்றும் மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஏ.கணேசன், சந்தனசிவா ஆர்.வி.அருண்பிரசாத், கே.சரவணன், எம்.ஹரிகிருஷ்ணன், கே.ஆசைத்தம்பி, எல்.அன்பு, ஜி.பாரதி, தேசப்பன், டாஸ்மாக் கணேசன், வெங்கடேசன், குமுதா பெருமாள், எச்.வாசுகி, எம்.மாலா, டி.ஷகிலா, ஜெயந்தி, பத்மா, பாஸ்கர், ரூபலா, கே.பி.கர்ணன், ரமேஷ், மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மீனவ கிராம சபை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.