சிறப்பு செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் – கழக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை

கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் – 2020

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

1. கே.பி. முனுசாமி, கழக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர்

2.டாக்டர் மு. தம்பிதுரை, கழக கொள்கை பரப்புச் செயலாளர் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் மற்றுமுள்ள ஒரு இடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில்,

3. ஜி.கே.வாசன் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி n ஆகியோர் போட்டியிடுவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.