திருவண்ணாமலை

கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றிய தலைவர் தேர்தல் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றி தேர்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத் தலைவராக கழக விவசாயப் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைவராகவும், பாரி பாபு துணைத்தலைவராகவும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கான அறிவிப்பை தேர்தல் அலுவலர் நாச்சியப்பன் அறிவித்தார். ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு, நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட துணை பதிவாளர் ராமச்சந்திரன் பொதுமேலாளர் உலகநாதன், மேலாளர் சிவராமன், மாவட்ட கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் அமுதா அருணாசலம், மாவட்ட பொருளாளர் நைனா கண்ணு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ.குணசேகரன், திமலை நகர கழக செயலாளர் ஜே.செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்ய.சிவகுமார், மாவட்ட இலக்கிய அணிசெயலாளர் நாராயணன், வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் தொப்பளான், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அரவிந்தன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இளஞ்செழியன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் குட்டி கணேசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் பெருமாள், ஒன்றிய கழக செயலாளர்கள் கீழ்பெண்ணாத்தூர் பாஷ்யம், கலசப்பாக்கம் திருநாவுக்கரசு, துரிஞ்சாபுரம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ், கலசப்பாக்கம் தொகுதி கழக முன்னாள் செயலாளர் கோவிந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.