தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகக் குழு கூட்டம் : காவேரி காப்பாளர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை

மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகக் குழு கூட்டத்தில் காவேரி காப்பாளர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக கூட்டம் பி.பி.சாவடியில் உள்ள பாண்டியன் கூட்டுறவு அங்காடியில் தலைவர் ஜெ.ராஜா தலைமையில் நடைபெற்றது .நிர்வாக மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜீவா, பொதுமேலாளர் ராஜகுரு, துணைத்தலைவர் மஞ்சுளா, நிர்வாக உறுப்பினர்கள் ஜெயசீலன், மாணிக்கம், மதுரைவீரன், பார்த்திபன், ஆரோக்கியம், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைவர் ஜெ.ராஜா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

தை திருநாளை தித்திக்கும் திருநாளாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு 1000 மற்றும் பொங்கல் தொகுப்புகளை 2 கோடியே 5 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கிய முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நிர்வாக குழு கூட்டத்தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த புனிதப் பணியில் கூட்டுறவுத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் முதுகெலும்பான விவசாய மக்களின் மனதை குளிர செய்யும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, விளைநிலங்களை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அரசாணை வெளியிட்டு இதன் மூலம் காவேரி டெல்டா பகுதியை சேர்ந்த 28 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை பாதுகாத்து ஒட்டுமொத்த இரண்டு கோடி விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்திய காவிரி காப்பாளர், முதலமைச்சருக்கு இக்கூட்டம் பொற்பாதம் பணிந்து கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் அம்மா அவதரித்த பிப்ரவரி 24-ந் தேதியை, மாநில பெண்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தும், பெண்களை பாதுகாக்கும் வகையில் ஐந்து முத்தான திட்டங்களை அறிவித்து அம்மாவிற்கு அழியா புகழை பெற்றுத் தந்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.