தற்போதைய செய்திகள்

அரசின் சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பீர் – கழக வேட்பாளர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

திருப்பூர்

அரசின் சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கழக வேட்பாளர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதிக்குட்பட்ட பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி, யு.கே.சி.நகர் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கழக வேட்பாளர்களாகிய நீங்கள் கழக அரசின் சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். கிராமபுற மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக கறவை மாடுகள், வெள்ளாடுகள், நாட்டுக்கோழி, வீடுகள் இல்லாதவர்களுக்கு புக்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கொடுக்கப்படும் என்றும், பெரியகோட்டை குப்பை மேட்டு பகுதிகளை அகற்றி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கொண்டு வருவதற்கான முதல் கட்ட பணிகள் ஆகியவற்றை விரைவில் முடித்துக் கொடுக்கப்படும் என்றும், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா அமைக்கப்படும் என கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இக்கூட்டத்தில் ஆவின் பால் சேர்மன் வக்கீல் மனோகரன், பெரியகோட்டை முருகேசன், முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம், குணசேகரன், கவிதா, விஸ்வநாதன், யு.கே.சி. நகர் சாதிக், கே.ஏ.செந்தில், பி.ஜே.பி. நாகமாணிக்கம், தெண்டபாணி, மகாலட்சுமி, பாரதி, மயிலாத்தாள், கே.மணிகண்டன், எஸ்.மணிகண்டன், பி.மணிகண்டன், நாகராஜ் மற்றும் பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி, யு.கே.சி. நகர் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி பொறுப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.