தற்போதைய செய்திகள்

இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் – தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி பேச்சு

சென்னை

இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் என்று தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு வட சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி 95-வது கிழக்கு வட்டம் சார்பில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்ட கழக செயலாளர் வில்லிவாக்கம் ஜி. வேணு தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புதூர்மணி பேசியதாவது:-

அம்மாவின் சாதனைகளை எடுத்து கூறினால் நாள் கணக்கில் பேசலாம். தமிழக மக்களுக்காக பாடுபட்டவர் அம்மா. இஸ்லாமியர்களுக்கு நோன்பு காலத்தில், கஞ்சிக்கு அரிசி கொடுத்தவர் அம்மா. எம்.ஜி.ஆர்.க்கு பிறகு அம்மா, அம்மாவுக்கு பிறகு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் நாங்கள். அம்மா உணவகத்தை திறந்து ஏழை எளியோர்களுக்கு பசி போக்கியவர் அம்மா.

படிக்கும் பெண்களுக்கு இலவச நாப்கின், முதல் கல்வி உபகரணங்கள் அம்மா வழங்கினார். அம்மா இறந்த பிறகும் விலையில்லா மிதிவண்டி, லேப்டாப், ஆகியவைகளை வழங்கி வருகிறோம். 2021-ல் அதிமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். திமுகவால் முதலமைச்சராக ஆக கனவு மட்டுமே காணமுடியும். அவர்களை ஆட்சிக்கட்டிலில் பொது மக்கள் அமர வைக்க மாட்டார்கள். வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் இனி அதிமுக தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.