திருவண்ணாமலை

1303 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 கோடி கடனுதவி – தலைவர் பெருமாள் கே.ராஜன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 1303 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 கோடி கடனுதவிக்கான காசோலையை வங்கியின் தலைவர் பெருமாள் கே.ராஜன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழுவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பெருமாள் கே.ராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கர், இணைப்பதிவாளர் நந்தகுமார் பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் 1303 பேருக்கு ரூ.305 கோடி மதிப்பில் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு காசு கடனாக ரூபாய் 21.41 கோடி அனுமதிக்கப்பட்டது. 29 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்களின் 332 உறுப்பினர்களுக்கு ரூ.29.19 கோடி அனுமதிக்கப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மூலம் பணம் பெறும் வகையில் திருவண்ணாமலை பிரதான கிளையில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும் தற்பொழுது செய்யாறு கிளையில் புதிதாக ஏ.டி.எம் மையம் துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக ஐந்து இடங்களில் திருவண்ணாமலை வேங்கிக்கால், செங்கம், மாங்கால் மற்றும் வந்தவாசி ஏ.டி.எம் அமைக்க அரசிடம் அனுமதி வர தீர்மானிக்கப்பட்டது. செங்கம், காஞ்சி மற்றும் ஆதமங்கலம் புதூர் ஆகிய ஊர்களில் புதிய கிளை துவங்க அரசிடம் அனுமதி கோர தீர்மானிக்கப்பட்டது. கலசப்பாக்கம், வெம்பாக்கம் மற்றும் தானிப்பாடி ஆகிய இடங்களில் அரசிடம் இருந்து நிலம் பெறப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 3 கிளைகளுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இம்மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பயிர்காப்பீடு தொகை விவரம் அறிந்து கொள்ள ஏதுவாக வங்கியின் புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் கணக்கில் வரவு செலவு செய்ய ஏதுவாக மொபைல் பேங்கிங் வசதி 8.3.2019 அன்று முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கோ.தட்சிணாமூர்த்தி, சி.தனசேகரன், வி.தண்டபாணி, டி.பி.துரை, வி.கீதா, டி.கஸ்தூரி ரங்கன், சி.லதா, ஆர்.முத்துக்குமார், நளினி, மனோகரன், ஜே.பத்மாவதி, எஸ்.பழனிவேல், டி.பூங்கொடி கே.வி.ரகோத்தமன், த.செந்தில்குமரன், ஆர்.வல்லி, என்.வெள்ளையன், ஜி.சி.வேலு உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் உதவி பொதுமேலாளர் வளர்ச்சி எம்.கருணாகரன் உதவி பொதுமேலாளர் (வங்கிகள்) விஜயகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

———–

படவிளக்கம்

————–

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழுவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தின் போது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகளை வங்கியின் தலைவர் பெருமாள் கே.ராஜன் வழங்கினார்.