தற்போதைய செய்திகள்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

தூத்துக்குடி:-

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணியாற்றுவது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆலோசனை நடத்தினார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணியாற்றுவது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டி சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி இடைத்தேர்தலில் நமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் திண்ணை பிரச்சாரம் செய்தும் கழக வேட்பாளரின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணியாற்ற செல்லும் கழக நிர்வாகிகள் பிரச்சாரம் முடியும்வரை நாங்குநேரி தொகுதியிலேயே தங்கியிருந்து தீவிர களப்பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.மோகன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி. கோவில்பட்டி நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் தலைவர் காந்தி என்ற காமாட்சி, தூத்துக்குடி ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன், பரும்புக்கோட்டை பாலமுருகன் உள்பட ஏராளமான கழகத்தினர்கள் கலந்து கொண்டனர்.