தற்போதைய செய்திகள்

நாங்குநேரியில் கழக வேட்பாளர் வெற்றி உறுதி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

திருநெல்வேலி:-

நாங்குநேரியில் கழக வேட்பாளர் வெற்றி உறுதி என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், நாங்குநேரி தொகுதியில் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி உறுதி. அவர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்தியாவிலே முன்மாதிரி திட்டமான ரூ.800 கோடிக்கு மேல் செலவில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது. இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும்.

நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் தனக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் குடிமராமத்து திட்ட பணிகளால், குளங்கள் கால்வாய்கள், தூர்வாரப்பட்டு வருகிறது. இது விவசாய மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

பேட்டியின் போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, திருநெல்வெலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேஷ்ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், கழக அமைப்புச் செயலாளரும், ஆவின் தலைவருமான சுதாபரமசிவம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், கழக அமைப்பு செயலாளர்கள் பா.வளர்மதி, முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ, தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி. மற்றும் பலர் உடனிருந்தனர்.