தமிழகம்

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள்):

எம்.எம்.அசோக்குமாா் – சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையா் (சென்னை காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா்).

எஸ்.லட்சுமி – வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையா்).

எஸ்.விமலா – சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா் (வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா்).

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.