தற்போதைய செய்திகள்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் முதலமைச்சருக்கு ஆளுயர மாலை அணிவித்து வி.வி.ராஜன் செல்லப்பா எழுச்சிமிகு வரவேற்பு

மதுரை

முதலமைச்சருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா ஆளுயர மாலை அணிவித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தார்.

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு மதுரை வழியாக திண்டுக்கல் சென்றார். அப்போது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது அதனைத்தொடர்ந்து முதலமைச்சரை வரவேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பெண்கள் பூர்ணகும்பம் வைத்தும் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து விழா மேடையில் முதலமைச்சருக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆளுயர மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, வெற்றி செழியன், பொன்னுச்சாமி, நகர செயலாளர் பாஸ்கரன், பகுதி கழகச் செயலாளர்கள் ஜீவானந்தம், வண்டியூர் முருகன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

சிறப்பான இந்த வரவேற்பு அளித்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவுக்கு மற்றும் இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மதுரையில் நடைபெற்ற புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க லோயர் கேம்பில் இருந்து 1200 கோடி மதிப்பில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகிறது இத்திட்டத்திற்கான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் துவங்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தான் அமைக்கப்பட்டுள்ளது இத்திட்டம் மதுரை மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன மருத்துவகருவி உள்ளதோ அதேபோல் மதுரையிலும் அமையும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார் அவர் கூறியுள்ளது போல் அனைத்து உயர் சிகிச்சைக்கு தேவையான அத்தனையும் நான் நிச்சயம் மதுரைக்கு மத்திய அரசிடம் கூறி வாங்கித் தருவேன்.இந்த அரசு உங்கள் அரசு உங்கள் நலன் கொண்ட அரசு இந்த அரசுக்கு நீங்கள் எப்போதும் நல் ஆதரவை தந்திட வேண்டும்

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.