தர்மபுரி

பாலகோடு அரசு கலை, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.20.32 கோடியில் கூடுதல் கட்டிட பணி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3.82 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியினையும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடங்கள் என மொத்தம் ரூ.20.32 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியினையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

பாலக்கோடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3.82 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் 762.85 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் இரண்டாம் தளம் 724.85 சதுர மீட்டர் பரப்பளவிலும், இரண்டாம் தளம் 724.85 சதுர மீட்டர் பரப்பளவிலும், மூன்றாம் தளம் 41.82 சதுர மீட்டர் பரப்பளவிலும் என மொத்தம் 2254.37 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடம் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தில் 12 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், 1 அலுவலகம், 6 கழிப்பறைகள் என மொத்தம் 23 அறைகள் கட்டப்படவுள்ளது. இப்பணிகள் 12 மாதத்திற்குள் நிறைவு பெறும்.

அதனை தொடர்ந்து பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் 1477.53 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் 1442.53 சதுர மீட்டர் பரப்பளவிலும், இரண்டாம் தளம் 1442.53 சதுர மீட்டர் பரப்பளவிலும், மூன்றாம் தளம் 94.60 சதுர மீட்டர் பரப்பளவிலும், நூலக கட்டடம் 533.75 சதுர மீட்டர் பரப்பளவிலும், இயந்திரவியல் கட்டடம் 355.91 சதுர மீட்டர் பரப்பளவிலும், இயந்திரவியல் ஆய்வகம் 355.91 சதுர மீட்டர் பரப்பளவிலும்,

பனிமணை கட்டடம் 894.00 சதுர மீட்டர் பரப்பளவிலும், ஆண்கள் கழிவறை 37.32 சதுர மீட்டர் பரப்பளவிலும், பெண்கள் கழிவறை 43.34 சதுர மீட்டர் பரப்பளவிலும் என மொத்தம் 6677.42 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், அலுவலகம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட 48 அறைகள், பனிமணை 4, நூலகம் 1, ஆண்கள் கழிவறை 1, பெண்கள் கழிவறை 1 என மொத்தம் 55 அறைகள் கட்டப்படவுள்ளது. இப்பணிகள் 18 மாதத்திற்குள் நிறைவு பெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மண்டல இணை இயக்குனர் சகுந்தலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செண்பகராஜன், துணைமுதல்வர் ரவி, கூட்டுறவு சங்க தலைவர்கள் சரவணன், வீரமணி, உதவி பொறியாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.