தமிழகம்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னை

பேரவைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும்சுகாதாரத்துறை ஊழியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின்னரே வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்கள், ஊழியர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு ‘ஹேண்ட் சானிடைசர் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தெர்மல் பரிசோதனை கருவியை நெற்றியில் வைத்து உடல் வெப்ப நிலை குறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.