தற்போதைய செய்திகள்

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த15 பேர் குடும்பங்களுக்கு ரூ.35 லட்சம் நிதி உதவி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை:-

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு ரூ.35 லட்சம் நிதி உதவியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

மதுரை செக்கானூரணியில் கடந்த 5. 7 .2009 அன்று நடைபெற்ற கட்டட விபத்தில் அருண்குமார், பாலமுருகன், முத்துப்பாண்டி, காசிநாதன் ஆகியோர் பலியானார்கள்

இதையறிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பலியானர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் பல்வேறு சம்பவங்களில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடைபெற்றது.

அதில் செக்கானூரணியில் கட்டட விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியும். பேரையூரில் கட்டட விபத்தில் பலியான ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், திருமங்கலம் தொகுதியில் பல்வேறு சாலை விபத்துகளில் பலியான 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவியும் என மொத்தம் 15 பேர் குடும்பங்களுக்கு ரூ.35 லட்சம் நிதி உதவிகளை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், தொழிலாளர் உதவி ஆணையாளர் சிவானந்தம், மற்றும் மாவட்ட கழக துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர செயலாளர் விஜயன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.