தற்போதைய செய்திகள்

நாங்குநேரியில் கழக தேர்தல் அலுவலகம் திறப்பு – அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்பு

திருநெல்வேலி:-

நாங்குநேரியில் கழக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி அருகில் உள்ள மதுரை- நாகர்கோவில் ரோடு அருகில் டோல் கேட் பகுதியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான கழக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், செல்லூர் கே.ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி, வளர்மதி, கடம்பூர் செ.ராஜூ, ஆர்.காமராஜ், வெல்லமண்டி என்.நடராஜன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், அ.தமிழ்மகன் உசேன், கழக அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவம், கழக இளைஞரணி செயலாளர் சிவபதி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஜெயபால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த் எம்.பி., ப.ரவிந்தரகுமார் எம்.பி., மாவட்ட கழக செயலாளர்கள் தச்சை கணேசராஜா, பிரபாகரன், திருச்சி குமார், வி.வி.ராஜன் செல்லப்பா,

முன்னாள் எம்.பி.க்கள் சவுந்தர்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோகரன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்பையா பாண்டியன், முத்துசெல்வி, தர்மலிங்கம், ராசிபுரம் சுந்தரம், சக்திவேல் முருகன், மாணிக்கராஜ், மாவட்ட மன்ற செயலாளர்கள் கண்ணன், பெரியபெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள் நடராஜன்,

ஜெரால்ட், மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, ஹரிஹர சிவசங்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கபரியல் ஜெபராஜன், மகபுஜான், அரசு போக்குவரத்து பிரிவு செயலாளர் கந்தசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், மருதூர் ராமசுப்பிரமணியன், ஜெயராமன், அழகானந்தம், கங்கை முருகன், பகுதி செயலாளர்கள் ஜெனி, மாதவன், ஹையாத், மோகன் மற்றும் அம்மா பேரவை செயலாளர் முத்து சரவணன், மாவட்ட பாசறை செயலாளர் சேர்மபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.