தமிழகம்

5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:-

தமிழகத்தில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கிருஷ்ணகிரி தலா 8 செ.மீ., குமாரபாளையம், திருத்துறைப்பூண்டி தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.