தமிழகம்

ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியநிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ரயில் மூலம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் இதுவரை 159 நடையில் 40 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் அவ்வப்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளதாலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் சென்னை மக்களுக்கு போதுமான தண்ணீர் தற்போது கிடைத்து வருகிறது. இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீரை ரயில் மூலம் கொண்டு வரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.