தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஆர்.காமராஜ் திண்ணை பிரச்சாரம்

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பட்டர்புரம், முத்துலாபுரம், ஏமன்குளம், ஆலங்குளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் மூலம் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி வளர்ச்சியடையாத பின் தங்கிய தொகுதியாக உள்ளது. கழக வேட்பாளர் வெற்றி பெற்றதும் இம்மக்களுக்கு அனைத்து தேவைகளையும் அரசிடமிருந்து பெற்று தந்து இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆண்டுகளில் நிறைவேற்ற பட வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவார். கழக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் உங்கள் பகுதியை சேர்ந்தவர்.

இவருக்கு தான் இந்த பகுதி மக்களின் தேவைகள் தெரியும். எதிர்க்கட்சி வேட்பாளர் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். அவருக்கு இந்த பகுதி மக்களின் நிலை பற்றி தெரியாது. ஆகவே உங்கள் தொகுதியை சேர்ந்த வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணனுக்கு இரட்டை இலைக்கு வாக்கு தந்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.