தற்போதைய செய்திகள்

கிராம மக்கள் கோரிக்கைகளை பரிவுடன் கேட்ட அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

திருநெல்வேலி:-

தேர்தல் பிரச்சாரத்தின்போது கிராம மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பரிவுடன் கேட்டறிந்தார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ களக்காடு ஒன்றியத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது கடம்போடுவாழ்வு கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிதண்ணீர் வசதி இல்லை. இது பற்றி ஏற்கனவே இருந்த காங்கிரஸ். எம்.எல்.ஏ.விடம் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் அவர் எங்கள் கிராமத்திற்கு எதுவும் செய்து தரவில்லை. எனவே இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரிசெய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை பரிவுடன் கேட்டறிந்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப் லைன் ஆகியவற்றை சீரமைத்து நிரந்தரமாக குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிரச்சாரத்தின்போது ஒன்றிய செயலாளர்கள் கயத்தாறு வினோபாஜி, விளாத்திகுளம் பால்ராஜ், புதூர் ஞானகுருசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் தனஞ்ஜெயன், தூத்துக்குடி ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன் உள்பட பலர் உடன் சென்றனர்.