சிறப்பு செய்திகள்

விஜயதசமி பண்டிகை : ஆளுநருக்கு, முதல்வர்,துணை முதல்வர் வாழ்த்து.

சென்னை:-

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயதசமி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், மகிழ்ச்சியான இந்த விஜயதசமி நாளில் உங்களுக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புனிதமான இந்த நன்னாளில் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, முன்னேற்றம் மேலும் அடைய எனது நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்களையும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதுபோல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஜயதசமி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மலர்கொத்து அனுப்பி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதனை
தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சருக்கு மலர்கொத்துடன்,வாழ்த்துக் கடிதம் அனுப்பி விஜயதசமி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.