திருநெல்வேலி

காங்கிரசின் கபட நாடகத்தை நம்பி ஓட்டுகளை வீணாக்காதீர் – ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள்

காங்கிரசின் கபட நாடகத்தை நம்பி வாக்குகளை வீணாக்காதீர் என்று நாங்குநேரி தொகுதி வாக்காளர்களுக்கு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தளவாய்புரம் ஊராட்சி ஒன்றியம் அம்பேத்கர் நகர் காலனி அருகே குடிமராமத்து பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரது நல்லாசி பெற்ற கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றால் தொகுதி மென்மேலும் வளர்ச்சி அடையும்.

இத்தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரால் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியவில்லை, காங்கிரஸ் வேட்பாளரின் கபட நாடகத்தை நம்பி தொகுதி மக்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். நாங்குநேரி தொகுதியில் உள்ள ஒன்றியம், நகர, வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி முன்மாதிரி தொகுதியாக மாற்ற வாக்காளர்கள் நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

பிரச்சாரத்தின்போது ஜெ.கே.ரமேஷ், ஆர்.எஸ். ஜனார்த்தனம், ஏ.டேவிட்ஞானசேகரன், வீரமருது பாண்டியன், மணல் ஜெ.ரவிச்சந்திரன், இ.ராஜேந்திரன், பா.இளங்கோவன், டி.பிராங்கிளின், கே.என்.கோபால், அண்ணா நகர் எம்.வேலு, ஜெஸ்டின் ஜி.வினோத்குமார், பிரேம்குமார், இரா.பரமகுரு, ஹரிகிருஷ்ணன், இ.எம்.எஸ்.நிர்மல்குமார், மற்றும் ஊராட்சி செயலாளர் எம்.செல்வகுமார் , கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.