திருவள்ளூர்

பொன்னேரியில் 1137 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவள்ளூர்

பொன்னேரியில் 1137 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் கலந்து கொண்டு 1137 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்கள் கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் வழங்கப்பட்டது தற்போது 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு 16 வகையான உபகரணங்களும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குவது மாணவர்களின் கடமை.

இவ்வாறு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீஞ்சூர் குணசேகரன், பொன்னேரி கவுரி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் பி.கார்மேகம், பொன்னேரி பேரூர் கழக செயலாளர் உபயதுல்லா, பொதுக்குழு உறுப்பினர் வி.பொன்னுதுரை, கிருஷ்ணாபுரம் வினோத், தமிழ்செல்வி, தேவராஜ், பகுதி கழக செயலாளர் காமராஜ், நல்லூர் முத்துக்குமார், மீஞ்சூர் தமிழரசு, பொன்னேரி நாகராஜ், துர்கா, பிரசாத், வெங்கடேசன், முருகன், விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.