சிறப்பு செய்திகள்

தமிழ் பண்பாட்டை மோடியை போல் எந்த பிரதமரும் அங்கீகரித்தது இல்லை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்

சென்னை:-

தமிழ் பண்பாட்டை மோடியை போல் எந்த பிரதமரும் அங்கீகரித்தது இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட் செய்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மாமல்லபுரத்தில் சிற்பங்களை பார்வையிட்டு ரசித்தனர். அப்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்து வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பாரத பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.