காஞ்சிபுரம்

கொரோனா முன்னெச்சரிக்கை – காஞ்சீபுரத்தில் 7 கோவில்கள் மூடப்பட்டது

காஞ்சிபுரம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவையொட்டி, தமிழகத்தில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் உள்பட 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு, கோவில் வெளியே வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் காஞ்சீபுரம் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பீதியால் காஞ்சீபுரத்தில் சுற்றுலா பயணிகள் குறைந்துவிட்டது. கோவில்களிலும் கூட்டம் இல்லாமல் வெறிசோடி கிடக்கிறது.