சென்னை

கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கீழ்க்கண்ட ரெயில் கள் ரத்து செய்யப்படுகிறது.அடுத்த மாதம்(ஏப்ரல்) 6, 13, 20-ந்தேதி இயக்கப்பட இருந்த சென்னை எழும்பூர்-தூத்துக்குடி(வண்டி எண்: 06003) சிறப்பு கட்டண ரெயில், ஏப்ரல் 7, 14-ந் தேதி தூத்துக்குடி-எழும்பூர்(82604) சுவிதா சிறப்பு ரெயில் மற்றும் 21-ந்தேதி இயக்கப்பட இருந்த தூத்துக்குடி-எழும்பூர்(06004) சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், நாகர்கோவில்-தாம்பரம்(06064) 6, 19-ந் தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(82624) 12-ந்தேதி, தாம்பரம்-நாகர்கோவில்(06063) 3, 10-ந்தேதி, நெல்லை-எழும்பூர்(82602) ஏப்ரல் 5, 12-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.இது தவிர பல்வேறு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.