தமிழகம்

நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் பூப்லோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜெயபால் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் பற்றிய ஆய்வுக்கு இந்த ஆண்டு 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜியம் ஒருவர். அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது பெருமைக்குரியதாகும். நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் பூப்லோ ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்ததற்கு தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.