தற்போதைய செய்திகள்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதிய உயர்வு – பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்…

சென்னை:-

இன்று முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது செய்யாறு தொகுதி உறுப்பினர் தூசி கே.மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 10ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்துவருகின்றனர்.இவர்களை மத்திய அரசின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போன்று பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ், வருடத்திற்கு 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, அனுபவத்திற்கு ஏற்ப அடையாள அட்டைகள்,பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நாளை முதல் அவர்களுக்கு 29 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது என்று பதில் அளித்தார்.