சிறப்பு செய்திகள்

விபத்தில் சிக்கிய இருவருக்கு உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : பொதுமக்கள் பாராட்டு

கோவை

விபத்தில் சிக்கிய இருவருக்கு உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மனிதாபிமான செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் போடிபாளையம் அருகே நேற்று இரவு வேகமாக வந்த 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் போடிபாளையத்தை சேர்ந்த பூபால் என்பவரும், பச்சபாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் பாதிக்கப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக போடிபாளையத்திலிருந்து மதுக்கரை நோக்கி கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்பி.வேலுமணி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் விபத்து நடந்துள்ளதையும், விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து கிடப்பதை அறிந்ததும் தனது காரை நிறுத்துமாறு கூறினார்.

பின்னர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை தானே மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடனடி சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உதவிய அமைச்சர் எஸ்.பி‌.வேலுமணியின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.