தூத்துக்குடி

முத்தையாபுரத்தில் மாபெரும் மாட்டுவண்டி போட்டி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாபெரும் விளையாட்டு போட்டியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி கழகம் சார்பில் முத்தையாபுரத்தில் மாபெரும் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தெற்கு பகுதி செயலாளர் பி.என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா வரவேற்றார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முத்தையா புரத்திலிருந்து துறைமுகம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இப்போட்டியை சாலையின் இரு புறங்களிலும் ஏராளமானோர் திரண்டு நின்று கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.சின்னப்பன், மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் ப.மோகன், கழக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுக நயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வகுமார், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, தூத்துக்குடி புறநகர் டிப்போ அண்ணா தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், சாம்ராஜ், சகாயராஜ், தொழிலதிபர் ரமேஷ், வட்ட செயலாளர்கள் சுடலைமணி, ஜெய கோபி, வெற்றிச்செல்வன், மாடசாமி, ஜெகதீசன், தொழில் அதிபர் பிராங்ளின், மார்க்கெட் நாட்டாமை கே.ஜே.பிரபாகரன், மாவட்ட மீனவர் அணி பி.சுரேஷ், தூத்துக்குடி மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.