தற்போதைய செய்திகள்

திருமலைநாயக்கர் 437-வது பிறந்தநாள் விழா – அமைச்சர்கள் மரியாதை

மதுரை

மாமன்னர் திருமலைநாயக்கரின் 437-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டினார். தொடர்ந்து மதுரை மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். மதுரை என்றாலே மன்னர் திருமலை நாயக்கர் மஹால் தான் நினைவுக்கு வரும். மதுரை மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் பல்வேறு ஆலயங்களை உருவாக்கினார். இதையடுத்து அவரது பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மன்னர் திருமலை நாயக்கரின் 437-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஜெ.ராஜா, சி.தங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, ஏ.கே.முத்து இருளாண்டி, அண்ணாநகர் முருகன், பி.எஸ்.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.