ஈரோடு

அந்தியூர் தொகுதி மக்களை தி.மு.க. எம்.எல்.ஏ. புறக்கணிப்பு- 3000 குடும்பங்களுக்கு கழகம் உதவி

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி மக்களை தி.மு.க. எம்.எல்.ஏ புறக்கணித்த நிலையில் இந்த கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் பேரூராட்சி கழகத்தின் சார்பில் 3000 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டதுஇதற்காக கழகத்தினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல் தி.மு.க.வின் சூழ்ச்சியால் தோல்வியடைந்தார்.

வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ ஏ.ஜி.வெங்க டாச்சலம் பொதுமக்களை சந்திக்கவும் இல்லை. கொரோனா காலத்தில் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏவால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் கை கொடுத்து உதவிகிறது.

அந்தியூர் பேரூராட்சி கழகத்தின் சார்பில் பேரூராட்சி கழக செயலாளர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும் ,ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வி.குருராஜ் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.எஸ்.சண்முகவேல் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் 3000 குடும்பங்களுக்கு 13 வகையான காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல பொருளாளர் மோகன்குமார், ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுசாமி, கிருஷ்ணன், மோகன், சின்னத்தம்பி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் மக்களுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கி பணியாற்றும் கழகத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து கொண்டனர்.