காஞ்சிபுரம்

அனகாபுத்தூர் நகரக் கழகம் சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை கூட்டம் – சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அனகாபுத்தூர் நகரக் கழகம் சார்பில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக்கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் தலைமையில் அனகாபுத்தூரில் நடைபெற்றது.

இதில் ஏராளமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரனிடம் வழங்கி தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அனகாபுத்தூர் நகரத்தின் பல்வேறு மாற்று கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி மாவட்டக் கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், பல்லாவரம் நகரக் கழகச் செயலாளரும், பல்லாவரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங், அனகாபுத்தூர் நகரக் கழகச்செயலாளர் பி.வி. ராஜாதுரைபாபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் க.விஜயசங்கர், மாவட்ட வர்த்தக பிரிவுச் செயலாளர் பா.காசிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் ஆர்.எம்.வினோத் கிருஷ்ணா, பல்லாவரம் நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பல்லாவரம் எம்.ஏ.சத்தியசீலன், தாம்பரம் மோகித் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.