தற்போதைய செய்திகள்

அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள்: துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

அன்புமணி ராமதாஸ் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாளை (இன்று) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நலமோடு வாழ வாழ்த்தி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.