தற்போதைய செய்திகள்

அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் 1000 பேர் கழகத்தில் இணைந்தனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக உள்பட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டடோர் அந்தந்தகட்சியில் இருந்து விலகி விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

சமீபத்தில் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரின் ‌வருகை பிடிக்கவில்லை என்று கூறப்படும் திமுகவினர் தற்போது தொடர்ந்து சாரைசாரையாக அக்கட்சியில் இருந்து விலகி விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ. மூலம் கழகத்தில் இணைந்து வருவது கண்டு விளாத்திகுளம் திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளிநாயகபுரம் ஊராட்சி தலைவர் தவசி அம்மாள், தலைமையில் சுமார் 200 திமுகவினரும், அதேபோல் ஜமீன் செங்கல்படை ஊராட்சி தலைவர் ரவீந்திரன் தலைமையில் 200 திமுகவினரும், அதேபோல் டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த மாவட்ட மகளிரணி செயலாளர், கொளத்தூரை சேர்ந்த குரு லட்சுமி என்பவர் தலைமையில் சுமார் 200 பேரும் அதேபோல் சூரங்குடி ஊராட்சியை சேர்ந்த முன்னாள் மதிமுக ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் 100 பேரும், வேம்பார் முன்னாள் ஊராட்சி தலைவரான பரலோக ராஜசேகரன் தலைமையில் திமுகவினர் 100 பேரும் என திமுக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 1000 க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கருப்பூர் சீனி, வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் சோலைசாமி, வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட அறநிலைத்துறை இயக்குனர் களஞ்செயன், விளாத்திகுளம் முக்கிய பிரமுகர் இராமச்சந்திரன், குட்லக் செல்வராஜ்,
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அச்சக பிரிவு தலைவருமான அன்புராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான நடராஜன், புதூர் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஞானகுருசாமி, விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி (எ) காமாட்சி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடு சாமி, விளாத்திகுளம் மாணவரணி செயலாளர் ராமநாதன், விளாத்திகுளம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.